Home » புலன்மொழி வளத்தேர்வுக்கான அறிவுறுத்தல்

புலன்மொழி வளத்தேர்வுக்கான அறிவுறுத்தல்

புலன்மொழி வளத்தேர்வுக்கான அறிவுறுத்தல்

புலன்மொழி வளத்தேர்வு மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்க்கும் முகமாக நடைபெறும்.

இப்புலன்மொழித்தேர்வானது கேட்டல், பேசுதல், வாசித்தல் என மூன்று பிரிவாக நடைபெறும்.

1. கேட்டல்

ஒலிவட்டு இருமுறை ஒலிக்கவிட்டபின் அதில் கேட்கப்பட்ட செய்தியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
( வளர்தமிழ் 11, வளர்தமிழ் 12 மாணவர்களுக்குக் கேட்டல் பகுதி இல்லை )

2. வாசித்தல் 

வகுப்பு நிலைகளிற்கேற்ப மணித்துளிகள் வழங்கப்படும்

இவ்வாசிப்பில் பின்வருவன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1. மனதுக்குள் எழுத்துக் கூட்டி வாசித்தல். 
2. எழுத்துகளைப் பிழையற இனங்கண்டு சொற்களை சரியாக வாசித்தல். 
3. எழுத்தொலிகளைச் சரியாகப் பலுக்குதல். 
4. குறில், நெடில் வேறுபாடுகளை அறிந்து தெளிவாக வாசித்தல். 
5. நிறுத்தற்குறிகளைக் கவனத்தில் கொள்ளல். 

3. பேசுதல் 

வளர்தமிழ் 1, வளர் தமிழ் 2 :
பாடநூல் தலைப்புகள் சார்ந்த படங்களும், சூழற்காட்சிப் படங்களும் வழங்கப்படும்.

படங்களைப் பார்த்துக் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தல வேண்டும். 

வளர் தமிழ் 3, வளர் தமிழ் 4, வளர் தமிழ் 5 :
வழமை போன்று படங்கள் கொடுக்கப்படமாட்டாது.

கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புகளில் ஒன்றைத் தெரிவு செய்து

அத்தலைப்பில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும். 

வளர்தமிழ் 6 தொடக்கம் வளர்தமிழ்12 வரை பாடநூல் தொடர்பான தலைப்புகள் ஐந்தும், பொது விடயங்கள் தொடர்பான ஐந்தும் எழுதப்பட்ட தாள்கள் (தலைப்புகள் மறைக்கப்பட்டு, படங்கள் வழங்கப்படமாட்டாது) மேசையில் வைக்கப்பட்டிருக்கும். இரு வகையான தலைப்புகளிலும் ஒவ்வொன்றை மாணவர் எடுத்து அவ்விரு தலைப்புகளிலும் விரும்பிய ஒன்றை மாணவரே தெரிவு செய்து அத்தலைப்பு தொடர்பாக பேச வேண்டும். மாணவருக்கு சில மணித்துளிகள் அணியம் செய்ய வழங்கப்படும். அணியம் செய்த பின்னர் தலைப்பு தொடர்பாக பேச வேண்டும். தமிழ்மொழியிலேயே தலைப்புத் தொடர்பாகப் பேசப்படல் வேண்டும்.

வளர்தமிழ் 6, வளர் தமிழ்7 :
1. கூறப்படுகின்ற சொல்லியங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருத்தல் வேண்டும். 
2. சொல்லிய உறுப்புகள், சொல்வளங்கள் கவனிக்கப்படல் வேண்டும்.

வளர்தமிழ் 8, வளர்தமிழ் 9, வளர்தமிழ்10 :
1. தலைப்புக்குரிய விடயத்தில் நின்று பேசுதல் வேண்டும் . 
2. தொடர்ச்சியாகப் பேசுதல் வேண்டும் 
3. பலுக்குதல், தெளிவு, தொனி கவனிக்கப்படல் வேண்டும் . 

வளர்தமிழ் 11, வளர்தமிழ் 12 : 
1. தலைப்புக்குரிய விடயத்தில் நின்று பேசுதல் வேண்டும்.
2. தொடர்ச்சியாகப் பேசுதல் வேண்டும்.
3. பலுக்குதல், தெளிவு, தொனி கவனிக்கப்படல் வேண்டும்.
4. சொல்வளங்கள் வளர்தமிழ் 11, 12க்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும்.

தொடர்புகளுக்கு
தலைவர் : 06 21 21 42 02 
நிர்வாகி : 07 66 75 65 05
aftchoisyleroi@gmail.com

புதன்கிழமைகளில்
பரதநாட்டியம்      12h30 – 17h00

இடம் : Salle Jean-Baptiste Clément
rue Jean-Baptiste Clément 94600 Choisy-le-Roi
( விளையாட்டு பழகும் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள மண்டபம் )

சனிக்கிழமைகளில்
சங்கீதம்      09h00 – 11h00

இடம் : Salle Clémenceau
7 Rue Georges Clémenceau 94600 Choisy-le-Roi

சனிக்கிழமைகளில்

ஆங்கிலம் : 09h00

தமிழ் மழலையர் நிலை : 09h00 – 11h00
தமிழ் பாலர் நிலை : 09h00 – 11h00
தமிழ் வளர் நிலை 1, 2 : 09h00 – 11h00
தமிழ் வளர் நிலை 3, 4, 5, 6 : 11h00 – 13h00
மிழ் வளர் நிலை 7, 8, 12 : 13h30 – 15h30
தமிழ் வளர் நிலை 9, 10, 11 : 15h30 – 17h30

இடம் : Salle Clémenceau
7 Rue Georges Clémenceau 94600 Choisy-le-Roi